Skip to main content

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

Published on 06/12/2019 | Edited on 07/12/2019

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று சில திருடர்கள் துப்பாக்கிகளுடன் புகுந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் கோரல் கேபில்ஸ் பகுதியில் உள்ள அந்த நகைக்கடைக்கு விரைந்து சென்றனர். காவல்துறையினர் வருவதை அறிந்து கொண்ட திருடர்கள், ஒரு தனியார் பார்சல் நிறுவனத்தின் வாகனத்தை வழிமறித்து, ஓட்டுனரை பிணைக்கைதியாக வைத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.


காவல்துறையினர் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து திருடர்களை துரத்திச் சென்றனர். அந்த வாகனம் ப்ரோவார்டு பகுதிக்கு வந்த போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது. அப்போது காவல்துறையினரை நோக்கி திருடர்கள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காவலர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் அந்த இடத்தில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு திருடர்கள், வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் பொது மக்களில் ஒருவர் என மொத்தம் 4 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் நகைக்கடை ஊழியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சார்ந்த செய்திகள்