Published on 06/07/2019 | Edited on 06/07/2019
கல்வி, அறிவியல் மற்றும் கலாசார தொடர்புடைய ஐ.நா சபையின் துணை அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிகவும் பழமை வாய்ந்த புராதன நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டு பாதுகாத்து வருகிறது.
இதற்காக தொடர்ந்து பல பழமை வாய்ந்த இடங்களை புராதன பட்டியலில் இணைத்துள்ளது. அந்த வகையில் இன்று மதியம் இந்த அமைப்பின் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு பழமை வாய்ந்த நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சிறந்த ஜெய்ப்பூர் நகரமும் இடம்பெற்றுள்ளது. மிகப்பெரிய கோட்டைகள், அழகான வீதிகள் ஆகியவற்றிற்கு பெயர்போனது ஜெய்ப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.