Published on 01/08/2019 | Edited on 01/08/2019
சீன தலைநகர் பெய்ஜிங் அருகே ஷூயுன் வாட்டர் பார்க்கில், மிகப்பெரிய நீச்சல் குளம் ஒன்று உள்ளது, அந்த குளத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்கும்போது, இயந்திரம் மூலமாக செயற்கையான அலையை உண்டாக்குவார்கள். இந்நிலையில் ஷுயுன் வாட்டர் பார்க்கில் நேற்று செயற்கை அலை உருவாக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக சுனாமி போல் ஒரு பேரலை எழுந்துள்ளது.

10 அடிக்கு உயரத்துக்கு எழுந்த அலையினால் நீச்சல் குளத்தில் குளித்துகொண்டிருந்த மக்கள் பலரும் அடித்து தூக்கி வீசப்பட்டார்கள். இந்த விபத்தில் 45 பேர் காயமடைந்தனர். எனினும் இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஷூயுன் வாட்டர் பார்க்கில் ஏற்பட்ட இந்த பேரலையை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.