அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு 22 மாதங்களுக்கு பின் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வந்ததால், ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கி வைக்கப்பட்டது. அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதை அடுத்து, பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தார். ட்விட்டர் ஊழியர்கள் கூண்டோடு ராஜினாமா செய்து வரும் சூழலிலும் ட்விட்டர் தொடர்பான பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில், ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை மீண்டும் செயல்படுத்தலாமா என வாக்கெடுப்பு நடத்தினார். இதற்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், அவரது ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கைக்கு ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.