ரஷ்யா, உக்ரைன் மீது ஒருவாரமாக கடும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. இந்த சூழலில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. கடல் பகுதியிலிருந்தும், வான்வெளியாகவும் ஏவுகணைகளை வீசி தாக்குதலைத் தீவிரப்படுத்தி வரும் ரஷ்யா, கீவில் உள்ள கீவ் நீர்மின் நிலையத்தைக் கைப்பற்றியதாகக் கூறியுள்ளது.
அங்கிருந்து இந்திய மாணவர்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் நிலையில் அங்கிருக்கும் தமிழக மாணவர் ஒருவர் உக்ரைனின் துணை ராணுவத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் கோவை மாவட்டத்திலிருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு விமானவியல் பற்றி படிச்சச் சென்ற சாய் நிகேஷ் என்ற மாணவன் போர் சூழலில் ஜார்ஜியன் நேஷ்னல் லிஜியன் என்ற உக்ரைனின் துணை ராணுவத்தில் இணைத்துக்கொண்டுள்ளார். உளவுத்துறையின் விசாரணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த மாணவர் சாய் நிகேஷ் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து குறித்து அவரது பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில் இளைஞரின் இந்த செயல் குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்தி வருகிறது.