சமூக ஊடகங்களில் மத வெறுப்புணர்வு பரப்பப்படுவதைத் தடுக்க சட்டம் இயற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
சமூக ஊடகங்களில் மத வெறுப்பு தொடர்பான பதிவுகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதனைத் தடுக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சமூக ஊடகங்களில் மத வெறுப்புணர்வு பரப்பப்படுவதைத் தடுக்க சட்டம் இயற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் தொடர்ந்து மத வெறுப்பு பதிவுகள் பதிவிடப்பட்டு அந்த பதிவுகள் தொடர்பான சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. சமீபத்தில் நகைச்சுவை நடிகர் ஒருவர் மத வெறுப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த பதிவு தொடர்பாக மன்னிப்பு கோரினார். இது போன்ற சம்பவங்களைத் தடுக்கவும், இத்தகைய செயலில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கும் வகையில் புதிதாக சட்டம் இயற்றப்பட உள்ளதாக இலங்கை அமைச்சர் புத்த ஷாஷான தெரிவித்துள்ளார்.