]பிரதமர் நரேந்திரமோடியின் சவூதி அரேபிய பயணத்துக்கு பாகிஸ்தான் வான்வழியை திறக்க அந்த நாடு மறுத்துவிட்டது. இதையடுத்து, சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து அமைப்பிடம் இந்தியா புகார் செய்தது.
கடந்த மே மாதம் சுஷ்மா சுவராஜ் சென்ற விமானத்துக்கும், ஜூன் மாதம் மோடி சென்ற விமானத்துக்கும் பாகிஸ்தான் அனுமதி கொடுத்தது. ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விமானத்திற்கும், மோடியின் விமானத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. கடந்தவாரம் மோடியின் சவூதி பயணத்துக்கு இந்தியா அனுமதி கேட்டிருந்தது. அதையும் பாகிஸ்தான் நிராகரித்தது. இதுகுறித்து இந்தியா சார்பில் சர்வதேச அமைப்பில் புகார் செய்யப்பட்டது.
ஆனால், நாடுகளின் உரிமையில் தலையிட சர்வதேச விமான போக்குவரத்து அமைப்புக்கு உரிமையில்லை என்றும், விமான போக்குவரத்து பாதுகாப்பு குறித்து மட்டுமே தலையிட முடியும் என்றும் அந்த அமைப்பு கூறியிருக்கிறது. இந்தியாவின் புகார் குறித்து பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும் அதன் தலைவர் கூறியிருக்கிறார்.