குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டத்தின் தாக்கம் ஆக்ஸ்போர்டு, ஹார்வர்ட், யேல் மற்றும் எம்ஐடி உள்ளிட்ட உலகின் முன்னணி கல்விநிறுவனங்களில் வரை எதிரொலித்துள்ளது.
இந்த பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து ஜாமியா மில்லியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (AMU) மாணவர்கள் மீதான காவல்துறை தாக்குதலை எதிர்த்து போராட்டம் நடத்தினர். மேலும் போலீசாரின் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கூட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். போலீசாரின் கொடூரமான தாக்குதலுக்கு தங்களது கண்டனங்களை மாணவர்கள் கூட்டாக அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸ் வரை பேரணியும், போராட்டமும் நடத்தினர்.