முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் ஒன்பதாம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 18.05.2018 அன்று மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்காலில் 9-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் நினைவேந்தலில் நினைவுச் சுடரை இலங்கையின் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ஏற்றி வைத்தார்.
இதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் நடத்தினர். இதில் பலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவத்தில் உயிர்களை ஈந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலியை செலுத்தினர். ஆனால் போராட்ட களத்தில் இருந்தவர் என தன்னைக் கூறும் வினாயகமூர்த்தி முரளிதரன் கருணா இந்த நிகழ்வுகளில் எதிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த நாளில் அவர் என்ன செய்தார் அல்லது ஏன் இதைப் புறக்கணித்தார் என்று நினைவேந்தலில் பங்கேற்ற பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.