Published on 22/03/2020 | Edited on 22/03/2020
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,069 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,08,594 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஈரானில் கரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 129 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே 1,556 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,685 ஆக உயிரிழந்துள்ளனர்.