Skip to main content

இங்கிலாந்து மகாராணி குடும்பத்தில் ஓரகத்தி சண்டை... 

சாமானியாக இருந்தாலும், மகாராணியாக இருந்தாலும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல வீடாக இருந்தாலும் அரண்மனையாக இருந்தாலும் குடும்ப மோதல் சகஜம் என்பது வரலாறு நமக்கு காட்டி வந்துள்ளது. இன்றும் உலகமே உற்று நோக்கும் இங்கிலாந்து மகாராணி குடும்பத்திலும் ஓரகத்தி சண்டை மூண்டுள்ளது.

 

elizabeth

 

ஒருக்காலத்தில் உலக நாடுகளை தனது காலடிக்கு கீழ் வைத்து ஆண்டவர் இங்கிலாந்து மகாராணி. பின்னர் உலக மக்களிடையே ஏற்பட்ட மாறுதல், புரட்சி போன்றவை காலணி நாடுகள் சுதந்திர நாடுகளாக மாறின. அதன்பின்னர் இங்கிலாந்தும் மக்களாட்சி நாடாக மாறியது. அது மக்களாட்சி நாடாக இருந்தாலும், மகாராணிக்கான அரச மரியாதையை இன்றளவும் தந்துவருகிறது. அவர் பெயரில் தான் ஆட்சி மறைமுகமாக நடக்கிறது. அதனை இங்கிலாந்து நாடாளுமன்றம் உறுதி செய்கிறது. மகாராணியின் செலவு, குடும்ப செலவு, மகாராணியின் அரண்மனையான பங்கிம்காம் அரண்மனை பராமரிப்பு செலவு என பலவற்றையும் இங்கிலாந்து அரசு நிதி தந்து வருகிறது.
 

இங்கிலாந்து போல வடஅயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா உட்பட 13 நாடுகளின் ஆட்சி மகாராணி பெயரில் தான் நடக்கிறது. உலகில் பதிவு எண் பொறிக்கப்படாத கார் வைத்துள்ள ஒரே நபர் இங்கிலாந்து மகாராணி மட்டுமே. அதேப்போல் அவருக்கு என தனியாக கடவுச்சீட்டு என்கிற பாஸ்போட் கிடையாது. இந்த உலகம் அவருக்கு கட்டுப்பட்டது என்பதை இன்றும் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றன. அப்படிப்பட்ட மகாராணி குடும்பத்தில் தான் ஓரகத்தி சண்டை மூண்டுள்ளது.

elizabeth

 

தற்போது மகாராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத். இவரது கணவர் அரசர் பிலிப். இந்த தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். சார்லஸ், ஆனி, ஆண்ட்ரூ, எட்வர்ட் ஆவர். நான்கு பேருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்கள் தத்தமது குடும்பத்தோடு தனித்தனி அரண்மனையில் வசித்து வருகின்றனர்.


இதில் இளவரசியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் – மறைந்த வேல்ஸ் இளவரசியான டயானா தம்பதியின் மகன்கள் வில்லியம்கேட், ஹென்றி என்கிற ஹாரி. இருவருக்கும் திருமணமாகிவிட்டது. வில்லியம் – காத்ரின் மிடில்டன் என்பவரையும், ஹாரி – மேகன்மார்கல் என்பவரையும் திருமணம் செய்துக்கொண்டு தத்தமது குழந்தைகளோடு லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் வசித்துவருகின்றனர்.
 

தற்போது வில்லியம், ஹாரி குடும்பம் பிரிந்து தனிக்குடித்தனத்துக்கு தயாராகிவருகிறார்கள். இதற்கான காரணமாக கூறப்படுவது காத்ரின் – மேகன்மார்கல் இருவரிடையே ஏற்பட்ட மோதல் என்கிறது இங்கிலாந்தின் பத்திரிக்கைகள்.
 

வில்லியம் க்கு 2011 ஏப்ரல் 29ந்தேதி திருமணம் நடைபெற்றது. ஹாரிக்கு 2018 மே மாதம் திருமணம் நடைபெற்றது. வில்லியம்க்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஹாரிக்கு இன்னும் இரண்டு மாதத்தில் குழந்தை பிறக்கவுள்ளது. திருமணம் ஆனது முதல் இரண்டு குடும்பமும் ஒன்றாக தான் இருந்து வருகிறது. இரண்டாம் எலிசபெத்துக்கு பின்னர் அவரது மகன்தான் மகாராஜாவாக போகிறார். அதற்கடுத்து வில்லியம் அந்த பதவிக்கு வருவார். இதனால் அவரது மனைவிக்கு அரண்மனையில் கூடுதல் முக்கியத்தும் இருந்துவந்துள்ளது. இதனை பொருத்துக்கொள்ள முடியவில்லையாம் ஹாரி மனைவியால் இதனால் சின்ன சின்ன மோதல்கள் வந்துள்ளன.

 

elizabeth


ராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பட்டுவருபவர்களுக்கு பலவித கட்டுப்பாடுகள் உண்டு. மக்களிடம் சாதாரணமாக புழங்க முடியாது, உடை கட்டுப்பாடு, உணவு கட்டுப்பாடு, சுற்றுலா கட்டுப்பாடு, சமூக வளைத்தளங்களில் அக்கவுண்ட் வைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தில் மூத்தோர்களை மதிக்க வேண்டும், அரச மரபுகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்பது கடும் விதி. இதனை மீறினால் ராஜதண்டனை கிடைக்கும்.


ஓரே அரண்மனைக்குள் வசித்து வந்த வில்லியம் மனைவிக்கும் ஹாரி மனைவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராஜ குடும்பத்தில் இப்படிப்பட்ட மோதல்கள் வருவது சாதாரணம். ஆனால் அதனை பெரும் கவுர பிரச்சனையாக கருதும் இங்கிலாந்து இராணி குடும்பம். அது உடனே சரிச்செய்யப்படும். இந்த ஓரகத்தி மோதலும் மகாராணி கவனத்துக்கு சென்றுள்ளது.


இதனால் இளவரசர்களை தனித்தனி குடும்பமாக்க முடிவு செய்துள்ளார் மகாராணி. அவரின் கட்டளைப்படி வெகு விரைவில் ஹாரி குடும்பம் பிராக்மோர் அரண்மனைக்கு குடிபெயரவுள்ளார்கள் என்கிறது இங்கிலாந்து பத்திரிக்கைகள். ஹாரி – மேகன் தம்பதிக்கு புதிய அரண்மனையில் தான் குழந்தை பிறக்கும் என்கின்றன.


அரச குடும்பத்தை பொருத்தவரை, அரசப்பட்டியலில் உள்ளவர்களுக்கு திருமணமாகிவிட்டால் அவர்களை தனித்தனி குடும்பமாக உருவாக்கிவிடுவது அரச மரபு. இது கடந்த காலத்திலும் நடந்துள்ளது. அதோடு, அவர்களை ராஜாங்க வேலைகளை பார்க்க அனுமதிக்கப்பட்டு, பணிகள் பகிர்ந்தளிக்கப்படும். இதனால் பல பிரச்சனைகளை தவிர்க்க தனி குடும்பமாக மாற்ற தனித்தனி அரண்மனைகளில் வைப்பது ராஜ வழக்கம் என்கிறார்கள்.