Skip to main content

கேலட்டிக் கூட்டமைப்பில் ஏலியன்கள் - பரபரப்பைக் கிளப்பும் இஸ்ரேல் விஞ்ஞானி!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020
alien

 

 

ஏலியன்கள் இருக்கிறதா, இல்லையா என்பது பல ஆண்டுகளாக நடக்கும் நீண்ட விவாதம். மறைந்த விஞ்ஞானி, ஸ்டீபன் ஹாக்கிங், ஏலியன்கள் இருப்பதாக நம்புவதாகவும், மனித குலத்தின் இருப்பு அவற்றுக்குத் தெரிந்தால், அது நமக்கே ஆபத்தாக முடியும் எனவும் எச்சரித்திருந்தார்.

 

இந்தநிலையில், இஸ்ரேல் நாட்டின் விஞ்ஞானி ஒருவர், ஏலியன்கள் இருப்பதாகவும், அவை அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், மேலும் அவை கூட்டமைப்பு சேர்ந்து செயல்படுவதாகவும் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

 

இஸ்ரேல் நாட்டு விண்வெளி பாதுகாப்பு திட்டத்தின், தலைவராகக் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பணியாற்றிய ஹைம் ஈஷத், அந்நாட்டின் ஊடகத்துக்கு அளித்த பேட்டியின் போது இதனைத் தெரிவித்துள்ளார். ஏலியன்கள் மிக நீண்டகாலமாக நம்மோடு இருக்கின்றன. அவை 'கேலட்டிக் கூட்டமைப்பு' என்ற பெயரில், இணைந்து செயல்படுகின்றன எனத் தெரிவித்துள்ள ஹைம் ஈஷத், ஏலியன்கள் அமெரிக்காகவோடு இணைந்து செயல்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவற்றின் இருப்பை அறிவிக்கத் தயாரானார். ஆனால், அது தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் எனவும், மனிதர்களுக்கு விண்வெளி பற்றியும், பறக்கும் தட்டுகள் பற்றியும் புரிதல் வரும்வரை, தங்கள் இருப்பை வெளியிட வேண்டாம் என அவை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்