
40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இந்தியா இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டி வரும் நிலையில், பாகிஸ்தான் இதில் தங்களுக்கு சம்பந்தம் கிடையாது என மறுப்பு தெரிவிக்கிறது. இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் பிரதமர், 'எந்த ஆதாரமும் இல்லாமல் எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஆதாரம் இருந்தால் தாருங்கள். அதன்பின் உங்களின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறோம். புல்வாமா தாக்குதலில் இருந்து பாகிஸ்தானுக்கு என்ன பலன் கிடைக்கும்? மேலும் நீங்கள் எங்களை தாக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கு நாங்கள் திரும்ப பதிலடி கொடுப்போம். ஒரு போர் தொடங்குவது என்பது மனிதர்களின் கையில்தான் உள்ளது. இது எங்கு சென்று முடியும் என்பது கடவுளுக்குதான் தெரியும். இந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்' என கூறினார்.