தற்போது கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தாக்கம் இன்னும் பல தசாப்தங்கள் உணரப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 1.7 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6.8 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் பரவல் அதிகரித்து வரும் சூழலில், இந்த வைரஸுக்கு தடுப்பூசி கண்டறியும் பணி, பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. மேலும், வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தாக்கம் இன்னும் பல தசாப்தங்கள் நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய சுகாதார நெருக்கடியாக கரோனா பாதிப்பு இருக்கும். கரோனா பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டிருந்தாலும், இதுகுறித்த பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளும் தற்போது உயர்வைச் சந்தித்து வருகின்றன. தற்போது கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தாக்கம் இன்னும் பல தசாப்தங்கள் உணரப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.