இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கேட்பரி நிறுவனம் வெளியிட்ட புதிய சாக்லேட் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேட்பெரி சாக்லெட் சார்பில் ‘யுனிட்டி பார்’ என்னும் ஒற்றுமைக்கான சாக்லெட் வெளியிடப்பட்டது. 73 ரூபாய் விலைகொண்ட இந்த சாக்லேட் வெள்ளை, பழுப்பு மற்றும் கறுப்பு என மூன்று வண்ணங்களை கொண்டது. இதனை பார்த்த பலரும் ஒற்றுமைக்கான சாக்லேட் என கூறி நிறவெறியை சுட்டிக்காட்டுவது போல இந்த சாக்லேட் அமைந்துள்ளதாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சாக்லேட்டின் மேல்பகுதியில் வெள்ளை நிறமும், கீழ் பகுதியில் கருப்பு நிறமும் இருப்பது எதன் வெளிப்பாடு என்றும் கேட்டு கேட்பரி நிறுவனத்தை கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர் உலகம் முழுவதும் உள்ள மக்கள். இந்த விவகாரத்தில் கேட்பரி நிறுவனத்திற்கு ஆதரவாக பலர் கருத்து கூறினாலும், பெரும்பாலானோர் அந்நிறுவனத்தின் இந்த செயலை கண்டித்தே வருகின்றனர்.