Published on 27/02/2022 | Edited on 27/02/2022
வான்வெளியை ரஷ்யா பயன்படுத்தத் தடை விதித்திருக்கும் நாடுகளின் பட்டியலில் பெல்ஜியமும் இணைந்துள்ளது.
உக்ரைனில் தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக மேற்குலக நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பொருளாதாரத் தடை ஒருபுறம் இருக்க, ரஷ்யா தங்களது வான்வெளியைப் பயன்படுத்தப் பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன.
அயர்லாந்து, பிரிட்டன், ஸ்லோவேனியா, செக் குடியரசு, போலந்து, லிதுவேனியா, கனடா, லாட்வியா, எஸ்தோனியா, பின்லாந்து, ருமேனியா, பல்கேரியா, டென்மார்க், நெதர்லாந்து, பிரான்ஸ், ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தங்கள் நாட்டு வான்வெளியைப் பயன்படுத்தத் தடை விதித்திருந்தனர். இந்த பட்டியலில் தற்போது பெல்ஜியமும் இணைந்துள்ளது.