உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,13,72,004 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,32,861 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 64,33,942 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 45,182 பேருக்கு கரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 29,35,770 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் 6,74,515, ஸ்பெயினில் 2,97,625, இத்தாலியில் 2,41,419, பெருவில் 2,99,080, சிலியில் 2,91,847, சீனாவில் 83,545, மெக்ஸிகோ 2,45,251 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
பிரேசிலில் ஒரே நாளில் 35,035 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 15,78,376 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல் பிரேசிலில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,111 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 64,365 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கரோனாவுக்கு மேலும் 254 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,32,318 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் 10,027, பெருவில் 9,677, ஸ்பெயினில் 28,385, பிரிட்டனில் 44,198, இத்தாலியில் 34,854, சிலியில் 6,192, மெக்ஸிகோவில் 29,843, சீனாவில் 4,634 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.