1971 ல் வங்கதேசமானது பாகிஸ்தான் நாட்டிலிருந்து தனியாக பிரிந்து புதிய நாடானது. பிரிவினைக்கு பின் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம் 1971 மார்ச் 26 தனி நாடாக பிரிவதற்கான போரினை தொடங்கியது. இதில் இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு வங்கதேச பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்தது. எனவே வங்கதேச ராணுவத்திற்கு உதவியாக இந்திய ராணுவமும், பாகிஸ்தானை எதிர்த்து போரிட்டது. இந்த போரானது டிசம்பர் 16, 1971 ல் முடிவுக்கு வந்தது. இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்து, வங்கதேசம் தனி நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தியாகத்தை போற்றும் விதமாக வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் இந்திய ராணுவ வீரர்களுக்காக நினைவுச்சின்னம் அமைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் இதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.