2017ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
2017ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசுகள் இன்று சுவீடனில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, சுவீடனில் உள்ள நோபல் அகாடெமியின் சார்பில் துறைசார்ந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசைப் பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜாக்குவஸ் டியூபோசிட், ஜோச்சிம் ஃப்ரான்க் மற்றும் ரிச்சர்ட் ஹெண்டர்சன் ஆகியோர் உயிரிமூலக்கூறுகளின் கட்டமைப்புகளை மிகத்துல்லியமாக கண்டறியக்கூடிய கைரோ-எலெக்ட்ரான் நுண்ணோக்கிகளை உருவாக்கியதற்காக நோபல் பரிசு பெறுபவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு நிகழ்ச்சி சுவீடனில் உள்ள ராயல் அறிவியல் அகாடெமியில் வைத்து நடைபெற்றது. இவர்களுக்கான பரிசுத்தொகை சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படும்.