புதுக்கோட்டை மக்களின் தாகம் தீர்க்கும் பணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வெள்ளிக்கிழமை முதல் ஈடுபட்டு வருகிறது.
கோடை காலத்தின் தொடக்கம் முதலே கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பகலில் வெளியில் செல்வோர் வெக்கை தாங்காமல் துவண்டு வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக தொடர்ச்சியாக இயக்கங்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். நடத்தி வருகிறது. ரத்ததானம் வழங்குவது, இளைஞர்களுக்கான விளையாட்டுக் குழுக்களை அமைப்பது, சாலைகளை செப்பணிடுவது, திருவிழாக்களில் மோர் பந்தல் அமைப்பது உள்ளிட்ட மக்கள் நலப்பணிகளிலும் வாலிபர் சங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அதனொரு பகுதியாக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை நகரக்குழு சார்பில் புதுக்கோட்டை மக்களுகளின் தாகம் தீர்க்கும் பணியையும் தொடங்கியுள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கூடும் நகரத்தின் மையப் பகுதியான அண்ணா சிலை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இலவசமாக பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் பந்தல் தொடக்க நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்கத்தின் நகரச் செயலாளர் பி.அருண் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், துணைத் தலைவர் ஆர்.சோலையப்பன் மற்றும் நிர்வாகிகள் சுரேஷ், திவ்யா, விஷ்லி, அஞ்சம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.