Skip to main content

மார்க்கெட்டில் வெங்காயம் திருடிய இளைஞர் கைது

Published on 09/08/2017 | Edited on 09/08/2017
மார்க்கெட்டில் வெங்காயம் திருடிய இளைஞர் கைது

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு மாதமாக வெங்காயம் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

     கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதன் விளைவாக ஏற்பட்ட வறட்சியால், விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காய்கறி உற்பத்தி வெகுவாக பாதிகப்ட்டுள்ளது. இதனால், காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஒரு மாத அளவில் தமிழகமெங்கும் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை எழுபது ரூபாய் முதல் நூறு ரூபாய் வரை விற்பனை செயயப்படுகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள சுமுத்தூர் பகுதியை சேர்ந்த ஞானபிரகாசம் (வயது-50). இவர் பொள்ளாச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டில் வெங்காய வியாபாரம் செய்கிறார். வெளியூர்களில் இருந்து வெங்காயத்தை மொத்தமாக வாங்கி உள்ளூரில் இருக்கும் சிறு வியாபாரிகளுக்கு சில்லரைக்கு விற்று வந்துள்ளார். இவரது கடையில் கடந்த ஒரு மாத அளவில் சின்ன வெங்காய மூட்டை காணாமல் போய்க்கொண்டிருந்தது.

இதனால் சந்தேகம் கொண்ட ஞானபிரகாசம் மார்கெட் பொறுப்பாளர்களிடம் புகார் செய்துள்ளார். அவர்கள, மார்கெட்டில் வைக்கபட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடந்த மாதம் 31-ஆம் தேதி காலை 6:00 மணிக்கு ஞானபிரகாசம் கடையிலிருந்து ஒருவர் வெங்காய மூட்டை திருடிச்சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, காந்தி மார்க்கெட்டில் இருக்கும் இரவு காவலர்களுக்கு வெங்காயம் திருடிய நபரின் படத்தை காட்டி இவர் இனிமேல் மார்கெட் பக்கம் வந்தால் பிடித்து வையுங்கள் என்று மார்கெட் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை அந்த நபர் காந்தி மார்க்கெட் பகுதிக்கு வந்தபோது, காவலர்கள் அவரை பிடித்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் பெயர் ஆறுமுகம்(வயது-37). என்பதும், இவர் பொள்ளாச்சி அருகிலுள்ள டி.கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் என்றும் இவர் ஞானபிரகாசம் கடையில் 100 கிலோ வெங்காய மூட்டையை திருடியதையும் ஒத்துக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்