![kt rajendra balaji - tamilnadu - admk - minster - temple visit](http://image.nakkheeran.in/cdn/farfuture/T63JiNR3Ytc0F2aXARSNUy-pxF1BumDWdpV49Sgn6mk/1597944083/sites/default/files/2020-08/rb_1.jpg)
![kt rajendra balaji - tamilnadu - admk - minster - temple visit](http://image.nakkheeran.in/cdn/farfuture/6VY2tNKhjIVUeMFewJAESE-QmucMIrWhAtY1XudVqJM/1597944083/sites/default/files/2020-08/rb_2.jpg)
![kt rajendra balaji - tamilnadu - admk - minster - temple visit](http://image.nakkheeran.in/cdn/farfuture/1psvaniyAIN7alUucZ6QmPD6t5t9_KOSQNmsoGSFSrE/1597944084/sites/default/files/2020-08/rb_3.jpg)
Published on 20/08/2020 | Edited on 20/08/2020
விருதுநகர் அருகே மூளிப்பட்டியில், தனது குலதெய்வக் கோயிலை, சுற்றுப்புற மக்களின் ஒத்துழைப்போடு, முழுமுயற்சியுடன், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி புனரமைத்து வருவது குறித்து, கடந்த 18-ஆம் தேதி, நக்கீரன் இணையத்தில் ‘தர்மயுத்தம் அல்ல! சிவமாகிய சித்தம்! இது வேற ராஜேந்திரபாலாஜி!’ என்னும் தலைப்பில், செய்தி வெளியிட்டிருந்தோம்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து, ஆகஸ்ட் 28-ஆம் தேதி கும்பாபிஷேகம் காணவிருக்கும் இந்தக் கோவிலில், இன்று காப்பு கட்டி விரதத்தைத் தொடங்கியிருக்கிறார், கே.டி.ராஜேந்திரபாலாஜி. அதனைத் தொடர்ந்து, பல்வேறு பூஜைகளிலும் கலந்துகொண்டார்.