
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். 25 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கிறார். கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தினேஷ் வந்துள்ளான்.
அப்போது பக்கத்து வீட்டில் இருந்த 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததை பார்த்த பெற்றோர், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன்பேரில் தினேஷை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ஏற்கனவே இவன் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இப்போது அதே தினேஷ், மீண்டும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.