தமிழகத்தில் மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி பொது விடுமுறை என தமிழக அரசு மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் சென்னையில் உள்ள பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் ஏப்ரல் 18 ஆம் தேதி விடுமுறை இல்லை என ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது.
அதன் பிறகு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டனர். அதில் IT நிறுவனத்தின் கூட்டமைப்பான அமெரிக்கா "NASSCOM" அமைப்பு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , இந்த அமைப்பின் உத்தரவால் தேர்தல் நாளன்று பணிக்கு வர ஊழியர்களுக்கு நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாக புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ அவர்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் 100% வாக்களிக்கும் வகையில் , தேர்தல் நாளன்று ஊழியர்கள் தங்களுக்கு நிறுவனம் விடுமுறை அளிக்கவில்லையென்றால் 1800-4252-1950 (or) 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
பி.சந்தோஷ் ,சேலம்.