Skip to main content

வாலிபர் கொலை செய்யப்பட்டு எரிப்பு

Published on 09/12/2017 | Edited on 09/12/2017
வாலிபர் கொலை செய்யப்பட்டு எரிப்பு

விருத்தாசலம் அருகே வாலிபர் அடித்து கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவர் மீது பல்வேறு திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. இவருக்கும், குப்பநத்தம் நல்லூரை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் முன்விரோத பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஜம்புலிங்கத்தை அடித்து கொலை செய்த கண்ணன், ஜம்புலிங்கத்தின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் நகராட்சி குப்பை திடல் அருகே போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் இதுபற்றி தகவலறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் கண்ணனை கைது செய்ததனர். மேலும், ஜம்புலிங்கத்தின் சடலத்தை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-சுந்தரபாண்டியன்  

சார்ந்த செய்திகள்