Skip to main content

ஸ்டாலின் எழுதிய கோரிக்கை கடிதத்தை மத்திய அமைச்சர்களிடம் நேரில் வழங்கிய திமுக எம்.பிக்கள்

Published on 20/12/2017 | Edited on 20/12/2017
ஸ்டாலின் எழுதிய கோரிக்கை கடிதத்தை 
மத்திய அமைச்சர்களிடம் நேரில் வழங்கிய திமுக எம்.பிக்கள்



 தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதற்கு எதிராக போராட்டம் நடத்திய அப்பகுதி மக்கள்மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதோடு – அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்பதை வலியுறுத்தி மத்திய அணுசக்தி துறை அமைச்சர் மாண்புமிகு ஜிதேந்திரா சிங் மற்றும் மத்திய மின்துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தை புதுடெல்லியில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இன்று (19-12-2017) அமைச்சர்களை நேரில் சந்தித்து வழங்கினர்.



சார்ந்த செய்திகள்