கோயில் கட்டினால் மட்டும் ஓட்டு போட்டுவிடுவார்களா?' என எடப்பாடி பழனிசாமி,மறைமுகமாக பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'சேலம் மாவட்டத்தில் எத்தனை கோயில்கள் கட்டி இருக்கிறோம். நம்முடைய தொகுதியில் எத்தனை கோயில்கள் கட்டி இருக்கிறோம். அப்படி ஒவ்வொரு கோயில்களையும் கட்டி மக்கள் ஆதரிப்பதாக இருந்தால் எல்லாருமே கோயில் கட்டும் வேலைக்கு போய் விடுவார்கள்.
ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்களும் அவரவர்கள் விருப்பப்பட்ட கோவில்களுக்கு செல்கிறார்கள். இந்துக்கள் என்றால் கோவிலுக்கு, இஸ்லாமியர்கள் மசூதிக்கு, கிறிஸ்தவர்கள் தேவாலயத்திற்கு செல்கிறார்கள். அவரவர்கள் விருப்பமுள்ள அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆலயத்தை எழுப்புகிறார்கள். எனவே ஒருவர் ஆலயம் எழுப்பி விட்டால் அவருக்கே ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி இருந்தால் அதிமுகவில் எடப்பாடி எல்லாம் அன்னப்போஸ்டாக தான் இருக்க வேண்டும். அத்தனை கோவில் கட்டி கொடுத்திருக்கிறேன். இப்பொழுது கூட நங்கவள்ளியில் நரசிம்மர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அதுவும் நாங்கள் ஆரம்பித்தது தான். நம்முடைய இந்திய நாடு என்பது பல்வேறு மதங்கள் பல்வேறு சாதிகள் கொண்டது. அவரவர்கள் அவர்களுக்கு பிடித்த ஆலயங்களை எழுப்புகிறார்கள். தேவாலயங்களை எழுப்புகிறார்கள். அதனால் கோவில் கட்டினால் எல்லாமே அவர் (மோடி)பக்கம் போய் விடுவார்கள் என்பது தவறான கருத்து'' என்றார்.