Skip to main content

பொது இடங்களில் கட்சிக் கொடி கம்பம்  அமைக்க முழு தடை விதிக்கப்படுமா?

Published on 22/09/2018 | Edited on 22/09/2018

 

bl


பொது இடங்களில் கட்சிக் கொடி கம்பம்  அமைக்க முழு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதி


பொது இடங்களில் கட்சிக் கொடி கம்பம்  அமைக்க முழு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சேலம் கன்னங்குறிச்சி சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொது நல  மனுவில், கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்படும் சாலைகளை தோண்டி,  அரசியல் கட்சியினர், கட்சி கொடி கம்பங்களை நாட்டுகின்றனர். இது தமிழ்நாடு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். சாலையோரங்கள், பூங்காக்கள் பொது இடங்களில்  கொடிக்கம்பங்கள் நாட்டுவது  தொடர்பான விதிகளை, மாவட்ட நிர்வாகங்களும், மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அமல்படுத்துவதில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சாலைகளை தோண்டுவதை கட்டுப்படுத்துவதற்கு எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை எனவும், கொடிக்கம்பங்கள் நடுவதால் அரசியல் கட்சிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

பொது இடங்களில் கட்சிக் கொடிகளை அமைப்பதற்கு முழுத் தடை விதிக்க வேண்டும் என்று  2016ம் ஆண்டு தமிழக தலைமை தேர்தல்  அதிகாரி, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன், நீதிபதி எம்.வி. முரளிதரன் அடங்கிய அமர்வு, 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர் மற்றும் அரசு துறை  செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்