சுற்றித் திரியும் காட்டு யானைகள்: வீட்டிலேயே முடங்கியுள்ள கிராமத்தினர்
வால்பாறையை அடுத்த கல்யான பந்தல் எஸ்டேட்டில் நள்ளிரவு புகுந்த 6 காட்டு யானைகள் தேயிலை தோட்ட தொழிலார்கள் அஞ்சலி, தெய்வானை, மாரியம்மாள், தேவி, சந்திரன் ஆகியோரின் வீடுகளை இடித்து பொருட்களை தூக்கி வீசி சேதப்படுத்தின. தொடர்ந்து சித்தையன் என்பவரின் கடையை இடித்து உள்ளே இருந்த அரிசி, சர்க்கரை மாவை தின்று சேதப்படுத்தின. வனத்துறையினரும் தொழிலாளர்களும் இணைந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விட்டினர். காட்டுயானைகள் தொடர்ந்து அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் அச்சத்தில் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் கொழுந்து பறிக்கும் பணிகள் பாதிப்படைந்துள்ளது.
அருள்குமார்