திண்டுக்கல் மாவட்ட திராவிட கழகம் சார்பில் பெரியார் பிஞ்சுகள் மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்காக திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி முன் கூட்டியே திண்டுக்கல் வந்தவர். திண்டுக்கல் நாயுடு திருமண மண்டபத்தில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் பங்கு பெற்ற அறிவியல் கண்காட்சி, பேச்சு போட்டி மற்றும் கட்டுரை கவிதை போட்டிகளை பார்வையிட்டு கலந்து கொண்டார்.
அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த தி.க.தலைவர் வீரமணி, சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பு வரவேற்கதக்கது. இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தீர்ப்பு இறுதியானது இதை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் ஆட்சி மனிததர்ம ஆட்சியா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
ஸ்காட்லாந்து போலீஸ்க்கு இணையானது தான் நமது தமிழக காவல்துறை இருக்கும்போது ஹெச்.ராஜாவை கைது செய்வதற்காக மூன்று தனிப்படை அமைக்கப்பட்டிருந்தும் இதுவரை கைது செய்ய வில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்பு இந்த ஹெச் ராஜா தமிழக ஆளுனரை சந்தித்துள்ளார். அப்படியானால் தமிழக காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா? சட்டத்தின் கைகளை கட்டியது யார்? அப்படி கட்டப்பட்ட சட்டத்தின் கைகளை எப்போது அவிழ்த்து விடுவார்கள் தமிழக அரசை பொருத்தவரை மத்திய அரசின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு என்று சொன்னாலே தமிழக அரசு உட்கார்ந்து விடுகிறது.
சமீபகாலமாகவே தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருகிறது. பிஜேபி.ஆர், எஸ்.எஸ்.ஆகிய காக்கி அமைப்புதான் அதைசெய்து வருகிறது. இதற்கு பின்னணியில் ஹெச்.ராஜா இருக்கிறார் என்பது தான் உண்மை என்று கூறினார். அதைத்தொடந்து இரவு திண்டுக்கல்லில் நடைபெற்ற பெரியார் பிஞ்சுகள் மாநாட்டில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டார்.