Skip to main content

18 வயது பூர்த்தியடைந்த யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்: பிரேமலதா

Published on 02/01/2018 | Edited on 02/01/2018
18 வயது பூர்த்தியடைந்த யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்: பிரேமலதா

18 வயது பூர்த்தியடைந்த யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று காலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களை நேரிடையாக சந்திக்க உள்ளேன். இதுவரை 400 குடும்பத்தை சேர்ந்த மீனவர்கள் மாயமானது குறித்து தற்பொழுது மத்திய அரசு அறிவித்துள்ளது. மீனவர் மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக உள்ளது.

18 வயது பூர்த்தியடைந்த யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். குற்ற நடவடிக்கைகளிகளில் இல்லாதவர்களில் அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்கள் மனதில் இடம் பிடித்து அரசியலுக்கு வரலாம். இது ஜனநாயக ரீதியான தீர்வு.     
                         
ஆர்.கே.நகர் தேர்தலில், தமிழக அரசியல் இதுதான் நடக்கிறது. 50 ஆண்டு கால வரலாற்றில் சுயேட்சையாக வெற்றி பெற்றது திருமங்கலம் பார்முலா அது தற்பொழுது தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளது. மக்கள் தான் நல்ல தீர்வாக கொடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
 

சார்ந்த செய்திகள்