Skip to main content

ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது: முதல்வர் எடப்பாடி!

Published on 30/12/2017 | Edited on 30/12/2017
ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது: முதல்வர் எடப்பாடி!



டிடிவி தினகரனை போன்று ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சிறப்பாக செயல்பட்டு வரும் அதிமுக அரசு மீது தவறு கண்டுப்பிடிக்க முடியவில்லை என்பதால் சிலர் திட்டமிட்டு வீன் பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றனர். வெள்ளம் கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்படும் என்பதால் விரைவாக கொடுக்கும் பொருட்டு, இருப்பில் உள்ள சர்க்கரை பொங்கல் பரிசில் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் வருகின்ற போது தான் கூட்டணி குறித்து சிந்திக்க முடியும், அதிமுக கொடி கம்பத்தால் உயிரிழந்த உதகை பாபு மரணம் மற்றும் கருணாஸ் புகார் குறித்து கவனத்திற்கு வரவில்லை. பதவி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் கட்சி பொறுப்பிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். முத்தலாக் குறித்து ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தெளிவாக பேசியுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- அருள்

சார்ந்த செய்திகள்