எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையவுள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எய்ம்ஸ் அமைக்கும் இடம் குறித்து தேர்வு செய்ய துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை தேர்வு செய்து அறிவிக்க இன்னும் எத்தனை நாள் ஆகும். எந்த இடத்தில் அமைய உள்ளது. இது குறித்து மத்திய அரசிடம் கேட்டு விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.