சுகந்திர போராட்ட வீரரும் தமிழகத்தில் ஃபார்வார்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவராக இருந்த பசும்பொன்முத்து ராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30 ஆம் தேதி அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு எந்த பிரச்சனைகளும் நடக்காமல் இருக்க தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபடுவது வழக்கம்.
அதே போல தமிழகத்தின் முதல்வர் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள் என பலரும் தேவரும் மரியாதை செலுத்த வருவதால் மாநில காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் தொடங்கி உளவுத்துறை வரை அனைவரும் அங்கு குவிந்து இருப்பார்கள்.
சீருடை அணிந்த காவல்துறை அதிகாரிகளை மட்டும் இல்லாமல் மக்களுடன் மக்களாக கலந்து உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இதில் 500க்கும் மேற்பட்ட உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் சீருடை அணிந்த பல்லாயிர காவலர்களும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இப்போது பணியில் ஈடுபட்டு இருக்க கூடிய காவலர்களுக்கு ஒரு நாளைக்கு உணவு படி என்பது 250 ரூபாய் வீதம் மூன்று நாட்களுக்கு 750 ரூபாய் வழங்கபட வேண்டும்.
ஆனால் தற்போது 150 ரூபாய் வீதம் 450 ரூபாய் மட்டுமே வழங்கபட்டு இருப்பதாக உளவுத்துறையினர் வேதனை படுகிறார்கள்.
உளவுத்துறை அதிகாரிகளுக்கு பொறுப்பாக இருக்க கூடிய ஐ.ஜி சத்தியமூர்த்தி, எஸ்.பி .கண்ணன் ஆகியோர் தான் இதற்கான பொறுப்பாக இருக்கிறார்கள்.
ஆனால் உளவுத்துறைக்கு கீழ் மட்டதிலிருந்து தகவல்களை தலைமைக்கு அனுப்பி எந்த பிரச்சனையும் நடக்காமல் இருக்க பெரிதும் உதவ கூடியவர்கர்களுக்கு சென்று சேர வேண்டிய பணத்தை யார் சுருட்டுகிறார்கள் என்பது கீழ்மட்ட உளவுத்துறை அதிகாரிகளின் கேள்வியாக இருக்கிறது.