Skip to main content

அமைச்சருக்கு இரட்டை வரவேற்பு! இது அதிமுக கூத்து..!

Published on 11/11/2018 | Edited on 13/11/2018

 

ve

     

விளாத்திகுளம் இடைத் தேர்தலில் சீட் பெறுவதில் மாஜி எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயனும், சின்னப்பனும் காய் நகர்த்தி வருவதையும், மார்க்கண்டேயனுக்கு எதிராக அமைச்சர் கடம்பூர் ராஜூ போர்க்கொடி தூக்கி இருப்பதையும் ஏற்கனவே நக்கீரனில் சுட்டிக்காட்டி இருந்தோம். இந்த நிலையில் நேற்று (10-11-2018) நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கிறது.

 

v


    தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்க மதுரையில் இருந்து காரில் வந்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு, புதூர் பாண்டியாபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடி அருகே, மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாஜி எம்.எல்.ஏக்கள் சின்னப்பன், மோகன் ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர். சுங்கச்சாவடி வடக்குப்புறம் அமைச்சர் தரப்பின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு புதுக்கோட்டை நோக்கி சென்ற வேலுமணிக்கு சுங்கச்சாவடியின் தெற்குபுறம் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏவுமான சண்முகநாதன், மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் சால்வை போர்த்தி வரவேற்பு அளித்தனர். 500 மீட்டர் இடைவெளிக்குள் நடந்த இந்த இரட்டை வரவேற்பை வேலுமணியே ரசிக்கவில்லையாம்.


    இதைத் தொடர்ந்து தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திலும் மார்க்கண்டேயனுக்கும், கடம்பூராருக்கும் இடையே வார்த்தை போர் வெடிக்க ஒரு கட்டத்தில், கூட்டத்தில் இருந்து மார்க்கண்டேயன் வெளியேறிவிட்டாராம். 2 பேரும் அனுசரிச்சுப் போங்கப்பா என்று வேலுமணி அறிவுரை கூறிவிட்டு கோவைக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். அதிமுக அணிகள் இணைந்தாலும், இன்னும் மனங்கள் இணையவில்லை என்பது தூத்துக்குடி சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.!


 

சார்ந்த செய்திகள்