நாளை (06.05.2021) முதல் வருகிற 20-ஆம் தேதி வரை அத்தியாவசியத் தேவைக்கான கடைகள் மட்டும் (காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை) திறந்திருக்கும் என்று தமிழக அரசு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளது.
இந்த விதிமுறைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தமிழக அரசு குடும்பத்திற்கு ஒருவர் மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு வர வேண்டும் என்றும் அவர்கள் வரும்போது முகக் கவசம் கட்டாயம் என்றும் வலியுறுத்தியது.
ஆனால் நாளை ஒரு சில அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்ற அனைத்தும் முழுமையாக மூடப்படுவதால், (குறிப்பாக துணிக்கடைகள் பாத்திரக்கடைகள் உள்ளிட்டவை) இன்று திருச்சியின் முக்கியப் பகுதியாக விளங்கக்கூடிய என்.எஸ்.பி சாலை, சத்திரம் பேருந்து நிலையம், கடை வீதிகள் ஆகிய இடங்களில் பொதுமக்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. வீட்டில் குடும்பத்திற்கு ஒருவர் மட்டும் வரவேண்டும் என்ற கட்டுப்பாடுகளை மீறி குடும்பத்துடன் வீதிக்குள் நுழைந்துவிட்டனர்.
இன்னும் எத்தனை கரோனா வந்தாலும் நாங்கள் அசரப்போவதில்லை என்று கூறி கரோனாவுக்கு திருச்சி மக்கள் சவால் விடுகின்றனர்.