‘தமிழக நலனுக்காக மத்திய அரசுடன் சுமுக உறவு வைத்துள்ளோம்!’ - எடப்பாடி பழனிசாமி
தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை எடப்பாடி அரசு கொண்டாடி வருகிறது. இதுவரை 29 மாவட்டங்களில் நூற்றாண்டு விழா நடந்து முடிந்துள்ள நிலையில், 30வதாக திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டமன்ற சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசி முடித்தனர். இறுதியாக மைக்கைப் பிடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
திண்டுக்கல்லில் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தலில் புரட்சித்தலைவருக்கு மக்கள் அமோக வெற்றியைத் தந்தார்கள். அந்த முதல் வெற்றியே அதிமுகவுக்கு பலமான அடித்தளமாக மாறியது. அதிலிருந்து திண்டுக்கல் மக்கள் மீது எம்.ஜி.ஆரும், எம்.ஜி.ஆர் மீது திண்டுக்கல் மக்களும் தீராத பாசம் வைத்தனர். அதிமுக பிஜேபியின் கிளை கட்சிபோல் செயல்படுவதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். எதை வைத்து அப்படிச்சொன்னார் என்று தெரியவில்லை. அதிமுக எப்பொழுதும் தன்னாட்சியுடன் செயல்படும் கட்சியாகும். அது கொள்கை பிடிப்போடும் இருக்கும் கட்சியாகும். அதிகாரதிற்காக கொள்கையை விட்டுக்கொடுத்தது இல்லை. இப்போதும் மத்திய அரசுடன் ஒரு சுமுகமான உறவு வைத்து இருப்பதே தமிழக வளர்ச்சிக்காகத்தான். மற்றபடி உங்களைப் போல் பதவி சுகத்துக்காக கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை எனக்கூறினார். அதைத்தொடந்து ஒரு ஞானி கதை சொல்லி டிடிவியையும் சுட்டிக் காட்டி பேசி முடித்தார்.
- சக்தி