Skip to main content

குடிநீர் தட்டுப்பாடு: பூண்டி ஏரியை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை!

Published on 12/08/2017 | Edited on 12/08/2017
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலை: பூண்டி ஏரியை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி வறண்டு காணப்படுவதால் சென்னையில் உள்ள பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இதனால் பூண்டி ஏரியை தூர்வார வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் திருவள்ளூர் மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. வரட்சியின்  காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வரண்டு காணப்படுகிறது.

குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியும் பரப்பளவு 121, சதுர கிலோ மீட்டர் கொண்டது. இதில் உபரிநீர் வெளியேற 16 மதகுகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால் பூண்டி நீர்த்தேக்கம் பாளைவனம் போல்  காட்சியளிக்கிறது.

பூண்டி நீர்தேக்கம் தூர்வாரப்படததால் மழைக்காலங்களில் உபநீராக கொசஸ்தலை ஆற்றின் வழியாக கடலில் வீணாக கலக்கிறது. எனவே தற்போது பாளைவனமாக காட்சியளிக்கும் பூண்டி ஏரியை பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தூர்வார வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

- தேவேந்திரன்

சார்ந்த செய்திகள்