Published on 13/08/2019 | Edited on 13/08/2019
கர்நாடக அணைகளில் நீர் திறப்பின் காரணமாக சேலம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது 101 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்தசில தினங்களாகவே கர்நாடகவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் நீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 101 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் கடந்த 137 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையிலிருந்து தற்போது பாசனத்திற்காக 3000 கனஅடி நீரை தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார்.
மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கனஅடியாக உயரும் என கூற ப்படுகிறது.