நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் குற்றால அருவிகளில் தண்ணீர் விழ தொடங்கியது.
தற்போது மெயின் அருவி ஐந்தருவி ஆகிய இரண்டு அருவிகளிலும் தண்ணீர் பரவலாக விழுந்து கொண்டிருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்று காலை முதலே குற்றாலத்தில் வந்து குவியத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக மெயின் அருவி கரையில் வாகனங்கள் நிறுத்துமிடம் பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கடும் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் மழை பெய்து அருவிகளில் தண்ணீர் வரத் தொடங்கி இருப்பது அவர்களை மகிழ்ச்சியிள் ஆழ்த்தியுள்ளது.
எனினும் இது கோடை மழை என்பதால் தண்ணீர் வரத்து ஓரிரு நாட்களே இருக்கும் என்று தெரிகிறது. குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருப்பதால் குற்றாலத்தில் உள்ள வியாபாரிகள் உற்சாகமடைந்துள்ளனர்.