Published on 15/12/2020 | Edited on 15/12/2020

கட்சி, சின்னம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சியின் பெயர், 'மக்கள் சேவை கட்சி' என்றும், தேர்தல் ஆணையம் 'ஆட்டோ'வை தேர்தல் சின்னமாக ஒதுக்கியுள்ளதாகவும் ஆதரவாளர்கள் சிலர், சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், இதனை மறுத்து, கருத்துத் தெரிவித்துள்ள ரஜினி மக்கள் மன்றம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை தொண்டர்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.