காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இன்று 7வது நாளாக தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் ஒ௫ பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா மற்றும் காத்தி௫ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டு தமிழக. அரசை கண்டித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோசங்கள் எழுப்பினர்.
மேலும் எரிவாயு அடுப்பை பயன்படுத்தி தேநீர் குடிப்பது மற்றும் உணவு சமைப்பது போன்ற நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் எங்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேச வில்லை என்றால் இன்று இரவு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே சமையல் செய்து இங்கேயே காத்தி௫ப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர் மேலும் நாளை நடக்கும் போராட்டம் குறித்து ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார் மேலும் தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றமால் காலம் தாழ்த்தினால் எங்களது போராட்டம் தீவிரமடையும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அருள்குமார்