Published on 01/01/2023 | Edited on 01/01/2023

சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த் தயாரிப்பில் உருவாகும் படம் விழித்தெழு. இப்படத்தை தமிழ்செல்வன் இயக்குகிறார். சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகி வரும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விழித்தெழு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நக்கீரன் ஆசிரியர் மற்றும் இயக்குநரும் தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகிய இருவரும் வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.