
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள பொதுப்பணித்துறை, வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளில் தமிழ்நாடு நீர் மற்றும் நிலவளத் திட்டத்தின் கீழ், அமைக்கப்பட்ட திட்டங்களை உலக வங்கி திட்டத்தின் வல்லுநர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் முதல் கட்டமாக விருத்தாசலம் பொன்னேரி, குமாரமங்கலம், மேமாத்தூர் மற்றும் தொழுதூர் அணைக்கட்டுகள் ஆகிய பகுதிகளில் சென்று தடுப்பணைகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் என அனைத்தும் சரியான முறையில் பணி செய்யப்பட்டுள்ளதா என்றும், தரமாக கட்டப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் சென்னையிலிருந்து உலக வங்கித் திட்டத்தில் குழுவின் செயற்பொறியாளர் பிரதிவ், உதவி செயற்பொறியாளர் சாந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். இதே போல் விழுப்புரம் தலைமை வன பாதுகாவலர் ராகேஷ் குமார் ஜெலானி தலைமையில், விருத்தாசலத்திருந்து, ஜெயங்கொண்டம் வரை உள்ள நெடுஞ்சாலை ஓரம் நடப்பட்ட மரக்கன்றுகளை ஆய்வு செய்தனர்.