விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று மாணவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன்- வள்ளி இவர்களின் மகன் தேவநாதன் வயது 7. அதே கிராமத்தில் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் வருகின்ற இரண்டாம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண்ணால் ஆன சிலை செய்வதற்காக அதே ஊரில் உள்ள ஏரியில் மதியம் சுமார் 12 மணி அளவில் களிமண் எடுக்க சென்றபோது ஏரியில் வண்டல் மண் எடுக்கும் நபர்கள் வட்டமாக எடுக்காததால் குண்டும் குழியுமாக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கு காரணம் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாய நிலத்திற்கும் சரி குடிசை வீட்டிற்கும் சரி சில இடங்களில் ரியல் எஸ்டேட் நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு முறையற்ற முறையில் ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி கொடுத்தால் தான் இதுபோன்று இளம் பிஞ்சு குழந்தை இன்று ஏரியில் உள்ள குண்டும் குழியுமாக உள்ள குட்டையில் ஆழம் தெரியாமல் நீரில் முழுகி பரிதாபமாக சிறுவன் உயிரிழந்தார். இதனால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம் காந்தலவாடி பெரிய ஏரியில் குளிக்கச்சென்ற போது அதே காலனியைச் சேர்ந்த ஏழுமலை- தமிழரசி மகன் ஸ்ரீகாந்த்(15) என்பவர் நீரில் மூழ்கி உயிர் பிரிந்தது.
ஏமம் ஊராட்சியில் ஜான் மகன் லியோ(6). ஒன்றாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவன் ஏரியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தான்.