Published on 28/12/2021 | Edited on 28/12/2021
நேற்று (27-12-2021) விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் உலக மாற்றுத்திறனாளிகளின் விழா வளவனூரில் அமைந்துள்ள அன்னை சிறப்புப் பள்ளியில், புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் சுயதொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.லெட்சுமணன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்நிகழ்வில் நகர கழக செயலாளர் P.ஜீவா, கோலியனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் E.சச்சிதானந்தம், ஒன்றியக்குழு துணை பெருந்தலைவர் தலைவர் K.உதயகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.