வெங்கய்ய நாயுடுவுக்கு ஜி.கே.நாகராஜ் வாழ்த்து
கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’இந்திய நாட்டின் 15-வது குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பில் வாழ்த்து.
தென்னிந்தியாவைச் சார்ந்த மதிப்பிற்குரிய வெங்கையா நாயுடு எளிமையானவர், கொள்கையில் உறுதியானவர், நாகரீக அரசியல் களத்திற்கு சொந்தக்காரர். இந்தியாவை சிறப்பாக கட்டமைப்பதில் உறுதியானவர். இப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவின் குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் பணி மென்மேலும் சிறக்க கொங்குநாடு ஜனநாயக கட்சியின்(KJK) மனமார்ந்த வாழ்த்துக்கள். ’’