வேலூர் மாவட்டம் வாணியம்பாடி காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பர்வேஷ்குமார், சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெனிபர் கலந்து கொண்டு சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பர்வேஷ்குமார் பேசும்போது, ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றோம். இதன் காரணமாக கடந்த ஆண்டு 21 சதவிதம் விபத்துகள் குறைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைகவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவுயிட்டுள்ளேன். இதே போல் மற்ற துறைகளிலும் உத்தரையிட வேண்டும். இதை அனைவரும் கடைபிடித்தால் மேலும் விபத்துக்கள் குறையும். சாலையை கடப்பவர்கள் இரு பக்கம் பார்த்து சாலை கடக்க வேண்டும். நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும், அதிவேகத்தில் வாகனத்தை ஓட்ட கூடாது. வாகனங்களில் சயிடு மிரர் அவசியம் பொறுத்து இருக்க வேண்டும் என பேசினார்.
வாணியம்பாடி சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெனிபர் பேசும்போது, பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் சாலை விதிகளை பின்பற்றுவதில்லை, ஓட்டுனர் சீட்டில் உடன் யாரும் உட்கார வைக்க வேண்டாம், பள்ளி பேருந்துகளில் உதவியாளர் இல்லையென்றால் பேருந்து எடுக்க கூடாது. மீறி நிர்வாகம் பேருந்து இயக்க சொன்னால் காவல் நிலையத்திற்கு புகார் செய்யுங்கள், வாகனங்கள் ஓட்டும் போது சாலையில் குறுக்கே கால்நடைகள் வந்தால் வேகத்தை குறைத்து அதன் மீது மோதாமல் வாகனத்தை ஒட்டுங்கள், மேலும் 3 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளை ஓட்டுனர்கள் தங்கள் மடியில் உட்கார வைத்து வாகனத்தை ஓட்டக்கூடாது. அது சட்டப்படி குற்றமாகும் என எச்சரித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரிகள், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.