Published on 11/03/2019 | Edited on 11/03/2019

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது, நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்பது சம்பந்தமாக விவாதிக்கபட்டது.

இந்த பொதுக்குழுவில் மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் தமிழ வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கலந்து கொள்ளவில்லை என்றாலும், மாநில நிர்வாக குழு உறுப்பினர் தி.திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தின்போது தொலைபேசி மூலமாக பேசிய வேல்முருகன், "பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி"யிடபோவதாக அறிவித்தார்.