Skip to main content

மருத்துவமனையில் சில்மிஷம்! இளைஞனை செருப்பால் அடித்த பெண்மணி!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020
police investigation


வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அடுக்கம்பாறை என்கிற கிராமத்தில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கிறார்கள். தினமும் வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏழை மக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள்.


நோயாளிகளுடன் வரும் அவர்களது உறவினர்கள் தங்குவதற்காக மருத்துவமனை வளாகத்தில் ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நோயாளிகளை பார்க்க வரும், உடன் வரும் உறவினர்கள் எப்போதும் இருப்பர்.


வேலூரை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க பெண்மணி ஒருவர் நோயாளியாக உள்ள தனது உறவினர் ஒருவரை பார்க்க வந்துள்ளார். பார்வையாளர்கள் நேரம் இன்னும் தொடங்காததால், நோயாளிகளின் உறவினர்கள் காத்திருக்கும் வளாகத்தில் அமர்ந்துயிருந்துள்ளார். அப்போது, திடீரென அந்த பெண்மணி 30 வயது மதிக்கதக்க ஒரு இளைஞரின் சட்டையை பிடித்து, 'நாயே நீயெல்லாம், அக்கா, தங்கச்சியோட பொறக்கல. உங்க அம்மா வெளியில போனா இப்படி இன்னோருத்தன் செய்தால் உனக்கு எப்படியிருக்கும்' என திட்டியவர் தனது காலில் இருந்து செருப்பை கழட்டி அந்த இளைஞனை அடித்துள்ளார்.


இதனால் மருத்துவமனைக்கு வந்த நூற்றுக்கணக்கான மக்கள் இதனை நின்று வேடிக்கை பார்த்தனர். அங்கிருந்தவர்கள் 'என்னம்மா ஆச்சி? எதுக்காக அடிக்கறீங்க? அந்த பையனை' என கேள்வி கேட்டதும், 'என் வயசு என்ன? அவன் வயசு என்ன? என்னை சீண்டறான்' என சொல்ல அதிர்ச்சியானவர்கள் அந்த இளைஞனை நான்கு அடி அடித்தனர்.


பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல்துறையை சேர்ந்த காலர்களை அழைத்து அந்த இளைஞனை ஒப்படைத்தனர். அவனை அழைத்து சென்ற போலிஸார் அவனிடம் விசாரித்தபோது, தனது பெயர் பரசுராமன் என்றும், கம்மம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவன் என தகவல் கூறியுள்ளான். அதனை தொடர்ந்து அவனை போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

சார்ந்த செய்திகள்